தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களை, தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைத்து கவிழ்க்கும் சதி சம்பவங்கள் ரயில் ஓட்டுநரின் விழிப்புணர்வால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தலேல்நகர் மற்றும் உமர்தாலி ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத மர்மநபர்கள் எர்த் வயரை உதவியுடன் தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைத்து ரயிலைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டனர்.
தில்லியில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகார் நோக்கி ராஜ்தானி விரைவு சென்றுகொண்டிருந்தயில், தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருந்ததை ரயில் ஓட்டுநர் கவனித்து ரயிலை நிறுத்தினார். பின்னர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கத்தோடம் விரைவு ரயிலை தடம் புரளச் செய்ய இதேபோன்ற முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை, உள்ளூர் காவல் துறையினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை கண்காணிப்பாளர் நீரஜ்குமார் ஜடான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!