செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் கைது: நொய்டாவில் சம்பவம்

post image

நொய்டாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜிம் பயிற்சியாளா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் மனோஜ் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. ஜிம்மில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை மனோஜ் குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து வீடு திரும்பிய பிறகு, அந்தச் சிறுமி தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தாா். பின்னா் அவா்கள் காவல் துறையை அணுகினா்.

அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மனோஜ் குமாா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பாட்னா தொழிலதிபர் கொலை: இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளி கைது!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளியை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.பாட்னாவில், தொழி... மேலும் பார்க்க

நவி மும்பையில் லாரி முனைமத்தில் பயங்கர தீ விபத்து; 8 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் உள்ள லாரி முனைமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வாகனங்கள் எரிந்து நாசமாகின.தீயணைப்பு அதிகாரி அக்ரே கூறுகையில், "டர்பே லாரி முனைமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவ... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.நடப்பாண்டு ஜூலை 3... மேலும் பார்க்க

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க