செய்திகள் :

சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர்

post image

ஏழை - எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 100 புதிய அரசுப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சென்னையில் மின் பேருந்துகள் பயன்படுத்தப்படுவது போலவே, கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு மின் பேருந்துகள் விரைவில் வர உள்ளன.

அதற்கான 500 பேருந்துகளுக்கான டெண்டர் முடிவடைந்து பரிசீலனையில் இருக்கிறது. தொடர்ந்து இதில் கோவைக்கு 80 பேருந்துகள், மதுரைக்கு மின் பேருந்துகள் ஒதுக்கப்பட உள்ளன.

ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழில் துறையினரின் கருத்துகளும் கவனத்தில் கொண்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மரியாதையுடன் பழக அறிவுறுத்தப்படுகிறது.

சிலர் செய்யும் தவறுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மலையாள சினிமாவில் சாய் அபயங்கர்! அடுத்து என்ன தெரியுமா?

Electricity tariffs have been increased in a way that does not affect small and micro businesses: Minister Sivasankar

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.நாமக்கல் தில்லைபுரம் பகு... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,500 கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது.இன்று(ஜூலை 7) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 ... மேலும் பார்க்க

பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.அன்புமணி... மேலும் பார்க்க

தக்காளி விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை... மேலும் பார்க்க

நள்ளிரவில் பரபரப்பு! அன்னவாசல் அருகே பற்றி எரிந்த காட்டுத் தீ!

அன்னவாசல் அருகே தீடீரென்று செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ளது வயலோகம். இங்குள்ள பெரிய குளத்தை சுற்றி ஆள் உயரத்துக்கு செ... மேலும் பார்க்க

முதியோா், பெண்கள் இல்லங்கள் பதிவு: தமிழக அரசு அறிவுறுத்தல்

முதியோா், பெண்களுக்கான இல்லங்களைப் பதிவு செய்வதுடன், உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்... மேலும் பார்க்க