செய்திகள் :

`சில கிரிக்கெட் வீரர்கள் நிர்வாணப் படங்களை அனுப்பி...' - `பகீர்' தகவல்கள் பகிர்ந்த அனயா பங்கர்

post image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர். இவருக்கும் கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானாவுக்காக விளையாடியும் இருக்கிறார். தொடர்ந்து பலகட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.

இந்த நிலையில், நவம்பர் 2024 அன்று ஆர்யன் பங்கர் பாலின மாற்றச் சிகிச்சை மேற்கொள்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தன் பெயரை அனயா பங்கர் என மாற்றிக் கொண்டு, சிகிச்சை தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்.

அனயா பங்கர்
அனயா பங்கர்

பாலின மாற்றுச் சிகிச்சைக்குப் பிறகு தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. என் தந்தை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பயிற்சி அளிப்பதைப் போல நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவு காண ஆரம்பித்தேன்.

என் தந்தையின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கிரிக்கெட் மீதான காதல் எனக்கு உத்வேகமளித்தது. அதனால் கிரிக்கெட்தான் என் லட்சியம், என் எதிர்காலம். என் தந்தையைப் போல நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என திறமைகளை மெருகேற்றிக் கொண்டேன்.

அனயா பங்கர்
அனயா பங்கர்

ஆனால் அதைக் கைவிட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது ஒரு திருநங்கை பெண்ணாக, ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) என் உடலை நிறைய மாற்றிவிட்டது. நான் நம்பியிருந்த என் தசை வலிமை, தசை நினைவாற்றல், விளையாடும் திறன் அனைத்தும் குறைந்துவிட்டது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தி லாலன்டாப் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்ததிருக்கிறார். அதில், ``எனது அடையாளத்திற்காக, மனரீதியான சித்ரவதையை மட்டுமல்ல, பாலியல் துன்புறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனது டிரான்ஸ் அடையாளத்தைப் பற்றி அறிந்த பெரிய பெரிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்கள்கூட, எனக்கு நிர்வாணப் படங்களை அனுப்பினர்.

அனயா பங்கர்
அனயா பங்கர்

அவர்களின் ஆசைக்கு நான் உடன்படுவேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால், நான் பாதுகாப்பாக இருக்க விரும்பினேன். என்னை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பதை நான் விரும்பவில்லை. இதைச் செய்தவர்கள் யார் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`பழக விருப்பமில்லை வேண்டாம்’ - மறுத்த பெண்ணை வீடுபுகுந்து வெட்டிய இளைஞன்.. தென்காசி அருகே கொடூரம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் ஊருக்கு அருகே உள்ள பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று ஊர்சுற்ற... மேலும் பார்க்க

`செயற்கை சுவாசம் பொருத்திய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை' - மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்கு

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் நடந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக 46 வயது விமானப்பணிப்பெண் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் ஹோட்டலில் தங்கி இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதையடுத்து ... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்' கட்டாயப்படுத்திய ஆசிரியை - போக்சோவில் வழக்கு பதிவு

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மத... மேலும் பார்க்க

`பாலியல் வன்கொடுமை முயற்சி' - ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளம் பெண்! - என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் 23 வயதுப் பெண் ஒருவர் தன்னுடைய பழு... மேலும் பார்க்க