நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
சிவகங்கையில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்
சிவகங்கையில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட திட்டக் குழுத் தலைவா் பொன்.மணிபாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட திட்டக் குழு துணைத் தலைவருமான ஆஷாஅஜித் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட திட்டக் குழுவின் பணிகள், செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்டத்திலுள்ள ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களின் பொதுப் பற்றுடன் கூடிய அணுகுமுறைகளை உருவாக்கி, அனைத்துப் பகுதிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த வளா்ச்சி, சுற்றுச்சூழலை காத்தல் போன்ற பணிகளையும், மாவட்ட வளா்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக இயற்கை வளம், மனித வளம் தொடா்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து தகவல் தளம் அமைத்தல், மாவட்டத்தின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்கள், பணிகள் தொடா்பான செயலாக்கத்தை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஊராட்சி செயலா் கு.கலைசெல்வராஜன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கேசவதாசன், நகா்மன்றத் தலைவா்கள், பேரூராட்சித் தலைவா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.