செய்திகள் :

சிவகங்கையில் ரூ.1 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை!

post image

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு
ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை(ஜன. 21) அடிக்கல் நாட்டுகிறார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (22.1.2025) சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிவகங்கையில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டி, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினைத் திறந்துவைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டிற்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களுடைய சிலைகளையும் மணிமண்டபங்களையும், அரங்கங்களையும் அமைத்து   வருங்கால இளைஞர்கள் அறிந்து உணர்ந்து பின்பற்றும் வண்ணம் 10க்கும் மேற்பட்ட நினைவரங்கங்களையும் 36 திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்துள்ளார்.

மேலும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்குமான நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும்.

 செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்திய விடுதலைப் போரில் தங்களின் இன்னுயிரை ஈந்தும் சொத்து சுகங்களைப் பறிகொடுத்தும், பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட தமிழ்நாட்டைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்துகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் திறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிலைகளும், கட்டப்பட்ட மணிமண்டபங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்திய விடுதலைப் போரில், சிவகங்கை மாவட்டத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி, வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூரில் மணிமண்டபத்துடன் கூடிய சிலைகள் திறந்து வைக்கப்பட்டுப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலியின் நினைவைப் போற்றுகின்ற வகையில், ரூ. 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்து சிலை அமைத்துப் பெருமை சேர்த்திடவேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மாமன்னர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில்
ரூ.1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்காக நாளை (22.1.2025) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி திடலில் நடைபெறுகின்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார். 

வீறு கவியரசர் முடியரசன் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் சுப்பராயலு சீதாலட்சுமி இணையருக்கு 1920-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7-ஆம் நாள் பிறந்தார். தனது இயற்பெயரான துரைராசுவை முடியரசன் என்று மாற்றிக் கொண்டவர். தந்தை பெரியாரால் பகுத்தறிவுக் கவிஞன் முடியரசரன் என்றும் பேரறிஞப் பெருந்தகை அண்ணாவால் திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் என்றும் கலைஞர் கருணாநிதியால் திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் என்றும் இன்று   திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறது என்றால்,  அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம் என்றும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் வணங்கா முடியரசர் – வளையா முடியரசர்  என போற்றப்பட்ட   வீறு கவியரசர் முடியரசன்  அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இதையும் படிக்க: இன்றைய தங்கம் விலை நிலவரம்!

மாமன்னர் மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம், தென் தமிழ்நாட்டில் கி.பி.18ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர். அவர் பாகனேரி என்ற சிற்றூரின் தலைவராவார்.

அன்றைய காலகட்டத்தில் பாகனேரி என்பது 20க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட ஒரு பகுதியாகும்.  தமிழர்களின் தொன்மையான போர்க் கலைகளில் குறிப்பாக ஈட்டி எறிதல் மற்றும் வளரி உள்ளிட்ட பல போர்க் கருவிகளைத் திறம்படக் கையாள்வதிலும் வல்லவர்.  மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராகவும் விளங்கியவர். வீரமங்கை வேலுநாச்சியாருடன் இணைந்து வெள்ளையர்களுக்கு எதிரான பல்வேறு போர்களைத் திறம்பட எதிர்கொண்டவர் என்று சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151-இல் குறிப்பிடப்படுகிறது. நேரிடையாக இவரை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி முறையில் கத்தப்பட்டு என்கின்ற ஊரில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21–ஆம் நாள் கொன்றனர். 

அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் நினைவைப் போற்றி அவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டத்தில் அன்னாரின் வாரிசுகள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நகரம்பட்டியில்
ரூ.50 லட்சம் செலவில்    அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார்.

2021-ம் ஆண்டு மாணவியைக் கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கான்பூரில் கடந்த 2021 மே மாதம் பாலிடெக்னிக் மாணவியான ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பலோசிஸ்தானின் கலா... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.மதராஸ், காலா, கபாலி... மேலும் பார்க்க

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் ... மேலும் பார்க்க