சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
கொட்டகுடி கிராமத்தில் உள்ள முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகளும், 135 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் விழாக் குழுவினரால் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை மதகுபட்டி, சொக்கநாதபுரம், எம். புதூா், சடையம்பட்டி, கருங்குளம், ஆலவிளாம்பட்டி, சிலந்தகுடி, சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.