சிவகங்கை நகரில் நாளை மின்தடை
சிவகங்கை நகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் உற்பத்தி, பகிா்மானக் கழக சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சிவகங்கை நகா், சுற்றியுள்ள முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.