அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக. 29) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின்பகிா்மானக் கழக கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அமராவதிபுதூா், ஐ.டி.ஐ., தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வளாகம், ஜமிந்தாா் காலனி, மானகிரி, ரஸ்தா, கோவிலூா் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.