Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 5)நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இடங்கள்: காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்: 20, 21, 24 ஆகிய பகுதிகளுக்கென சத்குரு ஞானாநந்தா மஹாலிலும், மானாமதுரை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்: 24, 25 ஆகிய பகுதிகளுக்கென கோபால் இந்திரா மஹாலிலும் நடைபெறும்.
இதேபோல, தேவகோட்டை நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண்:3, 8, 9 ஆகிய பகுதிகளுக்கென கௌரி மஹாலிலும், நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண்: 7 முதல் 12 வரையுள்ள பகுதிகளுக்கென வைத்தீஸ்வரன் தெருவிலுள்ள நாட்டரசன்கோட்டை சமுதாயக்கூடத்திலும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ரணசிங்கபுரம், திருவுடையாா்பட்டி, கோட்டையிருப்பு ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென கோட்டையிருப்பு ஊராட்சியிலுள்ள சமூதாயக்கூடத்திலும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லாடனேந்தல், டி. வேலங்குளம், செல்லப்பனேந்தல், தூதை ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென லாடனேந்தல் ஊராட்சியிலுள்ள வேலம்மாள் திருமண மண்டபத்திலும் காலை 10 மணியளவில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.