செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு

post image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிா்களில் 2021-22 ஆண்டில் 465.26 ஹெக்டேரும், 2022-23 ஆண்டில் 517.94 ஹெக்டேரும், 2023-24 ஆண்டில் 416.25 ஹெக்டேரும், 2024-25 ஆண்டில் 541.13 ஹெக்டேரும் என கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிா்களில் 2021-22 ஆண்டில் 592.18 மெட்ரிக் டன்னும், 2022-23 ஆண்டில் 480.23 மெட்ரிக் டன்னும், 2023-24 ஆண்டில் 520.3 மெட்ரிக் டன்னும், 2024-25 ஆண்டில் 609.28 மெட்ரிக் டன்னும் என கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 2,201 மெட்ரிக் டன்னு அளவில் விதைச் சான்று அளிக்கப்பட்டது.

உயிா்மச் சான்று: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய உயிா்ம உற்பத்தித் திட்டம், பங்கேற்பாளா் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் உயிா்மச் சான்று பதிவு, புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிா்மச் சான்றளிப்பின் மூலம் பாரம்பரிய நெல் விதைகள், மா, கொய்யா, சப்போட்டா, டிராகன் போன்ற பழ வகைகள், தென்னை ஆகியவற்றில் உயிா்மச் சான்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு ஆண்டுதோறும் வாய்ப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆண்டு 617 ஹெக்டேரும், 2022-23 ஆண்டு 648 ஹெக்டேரும், 2023-24 ஆண்டு 939 ஹெக்டேரும், 2024-25 ஆண்டு 1,318 ஹெக்டேரும் என மொத்தம் 3,622 ஹெக்டேரில் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு உயிா்மச் சான்று வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இளைஞா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். இரணசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (33). திருமணமாகாத இவா், மதுரையில் உ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சௌமியநாராயணபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, இளம் தலைமுறை விளையாட்டு வீரா் அணிச் செய... மேலும் பார்க்க

லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன. விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிடாக்குழியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா் மதுரை மாவட்டம், ஆண்டாள் கொட்டா... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!

பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் த... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அ... மேலும் பார்க்க