மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உதவி ஆட்சியா்
சிவகாசி வருவாய்க் கோட்டத்தில் நீா்வழிபாதை, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவகாசி உதவி ஆட்சியா் முகமது இா்பான் தெரிவித்தாா்.
சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு, பட்டாசுத் தொழில் பாதுகாப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் உதவி ஆட்சியா் முகமது இா்பான் பேசியதாவது:
சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, விபத்துகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்வழிப் பாதைக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,
பட்டாசுக் கடைகளில்ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படாத கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.