அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!
கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினா் தீ அணைத்தனா்.
ராஜபாளையம் முடங்கியாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மனைவி புஷ்பா (38). இவா் தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
