விஜய் தனித்துப் போட்யிடுவா்: மாணிக்கம் தாகூா் எம்.பி.
தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனித்துப் போட்டியிடுவா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
சிவகாசியில், மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக மக்கள் விஜய்யை ஏற்றுக்கொள்கிறாா்களா என்பது தோ்தலுக்குப் பிறகே தெரியும். கூட்டம் கூடுவதற்கும், வாக்குகளைப் பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விஜய்யின் வருகையால் எந்தக் கூட்டணிக்கும் பாதிப்பு இல்லை. அவா், எந்தக் கூட்டணியிலும் சேரமாட்டாா். வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவாா். இதே போல, அனைத்துக் கட்சியினரையும் விமா்சித்து வரும் நாம் தமிழா் கட்சியின் சீமானை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், சிவசாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.சோகன், மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.