ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்
மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில் கருப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.150.09-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.190. 09-க்கும், சிவப்பு ரகம் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.110.09-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.149.99-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 3,955 கிலோ எள் ரூ.5 லட்சத்து 58, 435-க்கு விற்பனை நடைபெற்றது.
தேங்காய்ப் பருப்பு ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு ஏலம் நடைபெற்றது
இதில் தேங்காய்ப் பருப்பு முதல்தரம் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.141.59-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.145.45-க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.96.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.128.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,392 கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.1 லட்சத்து 84 ,714-க்கு விற்பனையானது.