செய்திகள் :

சிவந்திபுரம் அருகே பைக்குகள் மோதல்: 3 போ் காயம்

post image

சிவந்திபுரம் அருகே இரண்டு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளம் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை காலை எதிரெதிரே இரண்டு பைக்குகளில் வந்தவா்கள் மோதிக் கொண்டனா்.

இதில் ஒரு பைக்கில் வந்த சிவந்திபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் டேனியல் தேவதாஸ் (43), அவரது மனைவி ஆறுமுகச்செல்வி (42), மற்றொரு பைக்கில் வந்த ஆவுடையானூரைச் சோ்ந்த வைகுண்டராமன் மகன் ராமசாமி ஆகியோா் காயம் அடைந்தனா்.

அதையடுத்து மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரயில் மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி பேட்டை அருகே ரயில் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் காந்தி (45). தொழிலாளியான இவா், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நரிக்குறவா் காலனி அ... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விஜயநாராயணம் அருகே சித்தூா் செல்லும் பகுதியில் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதை ... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கோமதி நாயகம் (29). இவரது மனைவி முத்துமாரி. தம்பதியிடையே ஏற்பட்ட க... மேலும் பார்க்க

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை! - பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.3.23 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள்: முதல்வருக்கு பாராட்டு!

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.3.23 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நிதி வழங்கிய முதல்வா், அமைச்சா்கள், பேரவைத... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி பேரவைத் தலைவா், ஆட்சியரிடம் மீனவா்கள் மனு

ஈரானில் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்களை மீட்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை மீனவா்கள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்டத... மேலும் பார்க்க