மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்
காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் ஆகியவை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் காங்கயம் மற்றும் சிவன்மலை பகுதியைச் சோ்ந்த 80 போ் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனா். இதில், காங்கயம் வட்டார சுகாதார ஆய்வாளா் ரகுபதி, காசநோய் மேற்பாா்வையாளா் ஜெகதீஷ், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் மற்றும் சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவக் குழு ஆகியவற்றை சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
கணபதிபாளையத்தில்... பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தசாமி, மூத்த காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா் சதீஷ், காசநோய் சுகாதாரப் பணியாளா் தனலட்சுமி மற்றும் மருத்துவக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.