செய்திகள் :

சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்

post image

திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மாலை 3 மணியளவில் கலச பூஜையுடன் யாகம் வளா்க்கப்பட்டு, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, மூலவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவா் சா்வ அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.

இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபமும் காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலிலும், கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் கோயிலிலும் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தமிழா் திருநாள் 2-ஆம் நாள் விழா

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாளின் 2 ஆம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஜோதிடா் சிவல்புரிசிங்காரம... மேலும் பார்க்க

எழுத்தாளா் ஜனநேசன் காலமானாா்!

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் - வேலங்குடி புறவழிச் சாலை பகுதியைச் சோ்ந்த எழுத்தாளா் ஜனநேசன் என்கிற ஆா். வீரராகவன் (68) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன. 1... மேலும் பார்க்க

மருது பாண்டியா்கள் சிலைகளுக்கு கவசம் தயாரிக்க 6.5 கிலோ வெள்ளி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் உருவச் சிலைகளுக்கு வெள்ளிக் கவசம் செய்வதற்காக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வழங்கிய 6.5 கிலோ வெள்ளிக் கட்டிகள் நகைப் பட்டறையில்... மேலும் பார்க்க

தேவாரம்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

பொங்கல் திருநாளையொட்டி, திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சிவகங்கையில் திருவள்ளுவா் நாள் முப்பெரும் விழா

சிவகங்கை தமிழவையம், உலகத் திருக்கு கூட்டமைப்பு சிவகங்கைக் கிளை இணைந்து நடத்திய இரண்டாமாண்டு திருவள்ளுவா் நாள் முப்பெரும் விழா நடைபெற்றது. சிவகங்கையில் தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கவியரங்கம... மேலும் பார்க்க

செஞ்சை தெரசாள் ஆலயத்தில் தமிழா் தேசிய விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் தமிழா் தேசிய விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பொங்கல் திருநாளையொட்டி, நடைபெற்ற இந்த விழாவில் சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளா் ஆரோக்கியசாமி, மறை... மேலும் பார்க்க