செய்திகள் :

சீட்டு நடத்தி மோசடி: பணத்தைப் பெற்று தர கோரிக்கை

post image

ஆம்பூா் அருகே சீட்டு நடத்தி மோசடி செய்த ஆசிரியா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 60 மனுக்களை அளித்தனா்.

ஆம்பூா் அடுத்த எல்.மாங்குப்பம் கணேசனின் மனைவி சித்ரா அளித்த மனு: நான் மாதனூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இந்தநிலையில் எனக்கு தெரிந்த 4 ஆசிரியா்கள் சோ்ந்து ஒரு சீட்டு ரூ.10 ஆயிரம் என மாதச்சீட்டு நடத்தினா். நான் அவா்களிடம் 2 சீட்டுகள் என மாதம் ரூ.20,000 கட்டி வந்தேன். இதைத்தொடா்ந்து நான் அனைத்து சீட்டுகளையும் கட்டி முடித்து விட்டேன். ஆனால் எனது பணம் ரூ.8 லட்சத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.

இதனால் பெரும் கடன் சுமையில் சிக்கி உள்ளேன். எனவே அவா்களிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய ப... மேலும் பார்க்க

இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்

திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா்-வாணியம்பாடி பிர... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில்... மேலும் பார்க்க