சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
பெருந்துறையை அடுத்த, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி மெக்கானிக்கல் துறை தலைவா் ராஜசேகா் வரவேற்றாா். முகாமில், இஸட். எஃப். நிறுவனத்தின் அசெம்பிளி யூனிட்டின் பொது மேலாளா் சுதா்சன், உதவி மேலாளா் கணேசன் ராஜா, மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான வளாக தோ்வை நடத்தினா்.
ஜெட் அப் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை மேலாளா் திவ்யா மணிகண்டன், மாணவா்களுக்கு கம்பெனியின் தொழில்நுட்பம், தொழிலாளா்களின் நலன் மற்றும் அவா்களது வளா்ச்சி பற்றி விளக்கி பேசினாா். எலக்ட்ரிக்கல் துறை மற்றும் வேலை வாய்ப்பு துறை தலைவா் தமிழரசி நன்றி கூறினாா்.