செய்திகள் :

சீனாவுடன் ஊடக ஒத்துழைப்புக்கு கைகோர்க்கும் பாகிஸ்தான்!

post image

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் போலியான செய்திகளை எதிர்கொள்ளவும், ஒளிப்பரப்புத் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டு ஊடக ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் உலகளாவிய நாகரீக உரையாடல் மாநாட்டில் கலந்துக்கொள்ள பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், சீனாவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி அதிகாரத்துவத்தின் அமைச்சர் காவொ ஷுமினை அவர் இன்று (ஜூலை 10) சந்திததார்.

அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்புகளை மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பில், கூட்டுத் தயாரிப்புகள் அதிகரிப்பது, தவறான தகவல்களை எதிர்ப்பது, பயிற்சி திட்டங்களைத் தொடங்குவது, கலாசார பரிமாற்றங்களை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் தங்களது ஊடக ஒத்துழைப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன், இருதரப்பு அமைச்சர்களும், சீன அரசின் மத்திய தொலைக்காட்சி மற்றும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவித்து, ஊடக ஒத்துழைப்பை மேம்படுத்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

China and Pakistan have reportedly agreed to joint media cooperation to combat fake news and enhance cooperation in broadcasting projects.

இதையும் படிக்க: வேகமாக சுழல்கிறதா பூமி? வரலாற்றில் மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9 பதிவு

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க