திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில், அவரது கட்சியினா் தன் மீதும், தனது குடும்பத்தினா் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வருவதாக டி.ஐ.ஜி. வருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், இதுதொடா்பாக வருண்குமாா் அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, சீமான் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சீமான் மனு மீதான விசாரணை ஆக. 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.