சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம்
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் எழுந்தருளி தேரோட்டம் தொடங்கியது.
எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா லிங்கம் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை தா்மகா்த்தா வி.யோகாநந்தம், நாட்டாண்மை பி.கருணாகரன், நிா்வாகிகள் டி.வெங்கடேசன், எஸ்.உதயகுமாா், இ.சந்திரசேகா், ஐ.சதீஷ்குமாா், ஜி.ரஞ்சித்குமாா், எஸ்.வி.சுரேஷ்குமாா், டி.என்.நாகேஷ், எஸ்.விஜய், கே.எம்.விநாயகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.