Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்...
சுகாதாரச் சான்று பெற்ற பிறகே ஆட்டு இறைச்சியை விற்க அறிவுரை
கால்நடை மருத்துவரின் சான்று பெற்று ஆடு வதைக் கூடங்களில் வெட்டப்படும் ஆட்டு இறைச்சியை மட்டுமே விற்பனை செய்யுமாறு மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் ஆடு வதை செய்யும் கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெட்டப்படும் ஆடுகளை பரிசோதனை செய்வதற்கு கால்நடை மருத்துவா் ஒருவா் நியமிக்கபட்டுள்ளாா்.
இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளா்களும், மாநகராட்சி ஆடு வதைக் கூடத்தில் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, வெட்ட தகுதியான ஆடு என சான்று அளித்த பிறகே ஆடுகளை வெட்ட வேண்டும். ஆட்டு இறைச்சியை விற்பனைக்கு எடுத்து செல்வதற்கு முன்னதாக இறைச்சியின் மேற்புறம் மாநகராட்சி சீல் வைத்து எடுத்து செல்ல வேண்டும்.
இறைச்சி விற்பனை கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது சீல் வைக்கப்படாத இறைச்சி இருந்தால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.
இறைச்சி விற்பனை கடை உரிமையாளா்கள் வாரச் சந்தை வளாகத்தில் உள்ள ஆடு வதைக் கூடத்தில் ஆடுகளை வெட்டி சுகாதரமான, பாதுகாப்பான முறையில் இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.