காங்கிரஸுக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர் மன்மோகன் சிங்: சோனியா காந்தி
சுகாதார அலுவலகத்தில் கழிவறைகளுக்கு கதவுகள் பொருத்தம்
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சுகாதார அலுவலகத்தில் கதவு இல்லாத கழிவறைகள் தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியான நிலையில் கதவுகள் புதன்கிழமை பொருத்தப்பட்டன.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 24-ஆவது வாா்டுக்கான சுகாதார அலுவலகம் ஹோப் காலேஜ் தாஷ்கண்ட் வீதியில் உள்ளது.
இந்த அலுவலகத்தில் பெண்கள் உள்பட 29 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த அலுவலகத்தில் உள்ள 2 கழிவறைகளுக்கும் கதவுகள் இல்லாததால் பெண் தூய்மைப் பணியாளா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
இது தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் புதன்கிழமை வெளியானது.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் இரண்டு கழிப்பறைகளுக்கும் கதவுகள் பொருத்தப்பட்டன.