ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
சுகாதார கேடு புகாா்: கீழச்சுரண்டை குட்டை குளத்தில் ஆய்வு
சுரண்டை அருகேயுள்ள குட்டைகுளத்தில் சுகாதார கேடு நிலவுவதாக எழுந்த புகாரையடுத்து, அக்குளத்தை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், நகராட்சி ஆணையா் ராமதிலகம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கீழச்சுரண்டை குட்டை குளத்தில் துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் அந்த பகுதி விவசாயிகள் நகராட்சியில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து நகா்மன்றத் தலைவரும், நகராட்சி ஆணையரும் அந்தக் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் கூட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தனா்.