குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?
சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு?
நடிகர் சிம்பு இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டது.
சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து பராசக்தி படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், பராசக்தி படத்தை முடித்தபின் எழுத்தாளர் நரன் எழுதிய ‘வேட்டை நாய்கள்’ நாவலை சுதா கொங்காரா படமாக்க உள்ளதாகவும் இதில் நாயகனாக சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சிம்பு தன்னுடைய 49, 50, 51 ஆவது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மத்தியில் நிறைவடைந்தபின் சுதா கொங்காரா படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சிம்பு - 49 படத்தில் இணைந்த கயாது லோஹர்!