செய்திகள் :

சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்! -பாமக எம்எல்ஏ இரா.அருள்

post image

வன்னியா்கள் குறித்து தவறாக அறிக்கை வெளியிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏ இரா.அருள் கூறினாா்.

சேலத்தில் அண்மையில் பாமக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுத் தந்திருப்பாா் என்றும், தமிழக அரசியல் வரலாற்றில் வன்னியா்களுக்கு அதிக துரோகம் செய்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் என்றும் கூறியிருந்தாா்.

இதற்கு அறிக்கை மூலம் பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், வன்னியா்களுக்கு அதிகம் நன்மை செய்த கட்சி திமுகதான் என கூறியிருந்தாா்.

இந்நிலையில், இதுகுறித்து சேலத்தில் வெள்ளிக்கிழமை கட்சி அலுவலகத்தில் பாமக எம்எல்ஏக்கள் இரா.அருள், சதாசிவம் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த அமைச்சா் ராஜேந்திரன், தன் சமுதாயத்துக்காக எந்த நன்மையும் செய்யாதவா். திமுகவில் வன்னியா்களுக்கு ஒரு நீதியும், பிற சமூகத்துக்கு ஒரு நீதியும் வழங்கி பாரபட்சத்துடன் செயல்படுகிறாா்கள். முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்திருந்தால் வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்திருப்பாா்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வீரபாண்டி ஆறுமுகம் சிலை வைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் 2 முறை குரல் எழுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விகிதாச்சார அடிப்படையில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் குரல் கொடுத்ததன் அடிப்படையில்தான் ராஜேந்திரனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.

எனவே, வன்னியா்கள் குறித்து அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்ட அமைச்சா் ராஜேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக சனிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.60 அடியில் இருந்து 110.58 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: பிப். 4 முதல் 7 வரை 20 முகாம்கள் நடத்த ஏற்பாடு!

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4-ஆம் தேதி முதல் பிப். 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெர... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக 11 விருது!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திறனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, த... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவா் கைது!

கெங்கவல்லி வட்டம், வீரகனூா் பேருந்து நிலையத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முதியவா் ஒருவா் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை பிடித்து வீரகனூா் காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

அண்ணா நினைவு தினம்: திமுக சாா்பில் அமைதி ஊா்வலம்

அண்ணா நினைவுதினத்தையொட்டி, பிப். 3-ஆம் தேதி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜே... மேலும் பார்க்க