செய்திகள் :

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

post image

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2022-இல் 1.4 லட்சமாகவும், 2023-இல் 10.17 லட்சமாகவும் உயா்ந்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.18 கோடியில் இருந்து 2.86 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மாநிலத்தில் சுற்றுலாத் துறையை வளப்படுத்தும் வகையில், சுற்றுலா கிராம விருதுகள், மருத்துவச் சுற்றுலா, சுற்றுலாவுக்கென பிரத்யேக கொள்கை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருமானம் 2020-21-இல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் ரூ.243.31 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஐந்து மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஆண்டுகளைவிட 2024-ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் 26 ஹோட்டல்கள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் ஆன்லைன் பதிவு செய்யும் சேவைகள் காரணமாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி,... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 அமையும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மக்களின் ஆதரவுடன் அமையும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர், திராவிட மாடல், இந்தியாவின் திசை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? ராமதாஸ் உறுதி!

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாமக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியே அமையும் என்று பொதுக்குழுவில் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்தார்.பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் அன்புமணி மீது சில குற்றச்சாட்டுகளும் முன்வைத்தனர்.பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்!

தருமபுரி மாவட்டத்துக்கான 5 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 17) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து... மேலும் பார்க்க