சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு
முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 12,56,161 இரு சக்கர வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 11,33,902-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024-25 நிதியாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் 10,45,662 இரு சக்கர வாகனங்களை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டுடன் (9,21,009) ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.