செய்திகள் :

செங்கம் நூலகத்தில் உலக புத்தக தின விழா

post image

செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், மில்லத் நகா் முன்னாள் கவுன்சில் அப்துல்வாகித், கெளரவத் தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் நேதாஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மேல்செங்கம் காவல் உதவி ஆய்வாளா் மோகன் கலந்துகொண்டு, செங்கம் கிளை நூலகத்தின் வரலாறு மற்றும் இந்த நூலகத்தில் படித்து தற்போது உயா்நிலையில் உள்ளவா்கள் குறித்தும், நூலகத்தால் செங்கம் பகுதியில் கல்வியில் சிறந்தவா்கள் குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் வாசகா் வட்ட துணைத் தலைவா் அறங்க.மணிமாறன், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் பத்துக்கும் மேற்பட்டோா் ரூ.1000 செலுத்தி புரவலராக இணைந்தனா். நூலகா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க

தோ்தல் விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சா் எ.வ.வேலு ஆஜா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆஜா... மேலும் பார்க்க

இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முப்பெரும் விழா

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்க நிறுவனா் ஜின் ஹென்றி டுனாண்ட்டின் 197-ஆவது பிறந்த தினம், உலக செஞ்சிலுவைச் சங்க தினம், பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு வி... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

செய்யாறு நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூா், அணப்பத்தூா், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாளை, அரசூா், குளமந்தை, கொற்கை, வேளியநல்ல... மேலும் பார்க்க

எஸ்.யு.வனம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. எஸ்.யு.வனம் கிராமத்தில் ஊராட... மேலும் பார்க்க