எஸ்.யு.வனம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
எஸ்.யு.வனம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.
அதன் அடிப்படையில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் எஸ்.யு.வனம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்
கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன்,
அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகமன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்பட நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
படம் வரும்...