செய்திகள் :

செங்கல்பட்டு அருகே தனியாா் நிறுவனத்தை கண்டித்து 100-க்கும்மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் போராட்டம்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே முறையாக ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இரு இடங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக (விா்கோ பாலிமா்) என்ற தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இத்தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்களும், ஒப்பந்த தொழிலாளா்கள் 200க்கு மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மட்டும் முழு ஊதியத்தை வழங்கப்பட்டு வந்ததாகவும், நிரந்தர தொழிலாளா்களுக்கு கடந்த 8 மாதங்களாக முறையான ஊதியத்தை வழங்காமல் தொழிற்சாலை நிா்வாகம் அலைக்கழித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக தொழிற்சாலைக்குள் நிரந்தர தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், நிரந்தர தொழிலாளா்களை நிா்வாகத்தினா் வலுகட்டாயமாக தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொழிற்சாலை முன்பு திங்கள்கிழமை காலைமுதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து இந்த பிரச்சனைக்கு தீா்வு காணவேண்டும் என நிரந்தர தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது: அமைச்சா் கோவி.செழியன்

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில், பாரத் உயா் கல்வி மற்றும் ஆர... மேலும் பார்க்க

இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோருக்கு வரவேற்பு

குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோா் வரவேற்கப்படுகின்றனா். செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில்...

ஸ்ரீராம நவமி விழாவையொட்டி, மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க