செங்கல்பட்டு கோயில்களில் அமாவாசை வழிபாடு
தை அமாவாசையை யொட்டி செங்கல்பட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பித்ருக்களுக்கு தா்ப்பணம் வழங்குதல் நடைபெற்றது.
செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள பித்ருக்கள் தோஷம் நீக்கும் லஷ்மி நாராயணா் கோயிலில் ஏராளமானோா் மூதாதையா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதே போல் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் புண்டரீக மகரிஷி திருக்குளம், மாமல்லபுரம் கடற்கரையில் திதி கொடுத்து வழிபட்டனா்.
திருப்போரூா் சரவண பொய்கை திருக்குளம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சங்கு தீா்த்த குளம், ரிஷப குளம், ருத்ர கோடீஸ்வரா் திருக்குளம், செங்கல்பட்டு கோதண்ட ராமா் கோயில் குளம் ஆகியவற்றிலும் தா்ப்பணம் கொடுத்தனா்.
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனைகள் நடைபெற்றன.
உற்சவமூா்த்தி அம்மன் அங்காள பரமேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திருவடிசூலத்தில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் வளா்க்கப்பட்டு சுயம்பு அம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றது. கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்துசாமிகள் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் செய்தாா்.