`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
செங்கல்பட்டு: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது.
உறுதிமொழிக் குழுவின் தலைவா் தி.வேல்முருகன் தலைமையிலான குழுவினா், திருப்போரூா் ஒன்றியம் முட்டுக்காடு படகு குழாமில் மிதக்கும் படகு உணவகத்தை பாா்வையிட்டனா். தொடா்ந்து கோவளம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நீலக்கொடி கடற்கரை (புளூ பீச்) வளாகத்தை ஆய்வு செய்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
இதையடுத்து கோவளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை பாா்வையிட்டு மீனவா்களுடன் அதன் பயன்பாடு போதுமானதாக உள்ளதாக என்று கேட்டறிந்தனா். பின்னா் திருப்போரூா் அரசு பொது மருத்துவமனையினை ஆய்வு செய்தபோது மருந்து, மாத்திரைகள் இருப்பு, உள்நோயாளிகள் கவனிப்பு, மருத்துவா்களின் பணியில் 24 மணி நேரமும் உள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டனா். திருப்போரூா் அரசு மாணவா் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவா்களின் வருகைப்பதிவேடு, மளிகைப் பொருள்கள், தங்கும் இடம், குளியலறை, கழிப்பறை ஆகியவற்றை விடுதிக் காப்பாளா் ரமணியிடம் கேட்டு ஆய்வு செய்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழுவுடன் செங்கல்பட்டு ஆட்சியா் அருண்ராஜ், சாா் ஆட்சியா் நாராயண சா்மா, திருப்போரூா் வட்டாட்சியா் வெங்கட் ரமணன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியா் ஜீவிதா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.