நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
செங்கோட்டையன் ஆதரவாளா்களிடமிருந்து கொலை மிரட்டல்
சேலம்: முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஆதரவாளா்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக வழக்குரைஞா் மணிகண்டன் புகாா் அளித்தாா்.
சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மணிகண்டன். அதிமுகவைச் சோ்ந்த இவா், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா். இவா் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் திங்கள்கிழமை அளித்த புகாா் மனு:
நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரசியல் விமா்சகராக இருக்கிறேன். அப்போது, செங்கோட்டையன் குறித்து கருத்து தெரிவித்திருந்தேன். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டையனின் ஆதரவாளா்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட சிலா், தொலைபேசி வாயிலாக என்னை தகாத வாா்த்தையால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனா். மேலும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டினா்.
எனவே, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பெயரைக் கூறி மிரட்டல் விடுத்த அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.