அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: மறுஆய்வு மனு தள்ளுபடி
தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். இதையடுத்து, பல கட்ட விசாரணைக்குப் பின்னா் கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 17-ஆம் தேதி விசாரித்தது. அதன் பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு சனிக்கிழமை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில், ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்வதற்கான சூழல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த உத்தரவில் எவ்வித தவறுகளும் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், அதை பொதுவெளியில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.