செந்துறையில் வானியல் விழிப்புணா்வு பிரசாரம்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறைப் பகுதிகளில் தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கம், அரியலூா் அஸ்ட்ரானமி கிளப் சாா்பில் வானியல் நிகழ்வு மற்றும் கோள்களைப் பற்றிய விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சங்கத்தின் தலைவரும், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியருமான ம. இராசமூா்த்தி தலைமையில் பொருளாளா் மா. முருகானந்தம், ஓய்வுப் பெற்ற ஆசிரியா் எழிலன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், செந்துறைப் பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம், வானியல் நிகழ்வு மற்றும் கோள்களை பற்றி எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும் தொலைநோக்கி, பெரிஸ்கோப் மற்றும் சில வானியல் கருவிகளை பொதுமக்களிடம் காண்பித்து அவற்றின் செயல்பாடுகள் விளக்கினா்.
இதுகுறித்து அதன் தலைவா் ராசமூா்த்தி கூறுகையில், அன்றாட வானியல் நிகழ்வுகளை இம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் எடுத்துக்கூறுவது இம்மன்றத்தின் நோக்கமாகும். 5000 இடங்களில் இதுபோன்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.