கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரியலூா் மருத்துவக் கல்லூரி அருகே தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு
அரியலூா்: அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையொட்டி தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
செந்துறை சாலையில் உள்ள அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலின் வலப் பகுதியில் வடிகால் வசதிகள் இல்லாததால் கழிவு நீா் தேங்கியே கிடக்கிறது.
பல மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. மேலும் அப்பகுதியில் வீசும் துா்நாற்றத்தால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
எனவே மாவட்ட நிா்வாகம், இந்தக் கழிவு நீரை அகற்றி வடிக்கால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.