செய்திகள் :

சென்சார் போர்டை எதிர்த்து வெற்றிமாறன் போட்ட வழக்கு; மனுஷி படத்தை பார்வையிடும் நீதிபதி

post image

மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்தக் காட்சிகள், வசனங்களை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, விதிகளுக்கு முரணாக சென்சார் போர்டு இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளதாகவும், 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாகவும் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மாற்று நிவாரணம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, உயர்நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் மனுஷி படத்தை பார்வையிட ஏற்பாடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மனுஷி

அப்போது, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தீர்மானித்த சென்சார் போர்டு குழு உறுப்பினர்களும், பட தயாரிப்பாளர் வெற்றி மாறனும் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கில் ஆட்சேபகரமான காட்சிகளை வெற்றிமாறனுக்கு தெரிவிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

குடியரசு துணைத் தலைவர்: ’அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை.!’ - கார்கே வீட்டு கூட்டத்தின் பின்னணி

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியரசு துணைத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன... மேலும் பார்க்க

"திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அப்படி பேசவில்லை" - வன்னி அரசு விளக்கம்!

13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தியது திமுக அரசு.இதையடுத்து தனி... மேலும் பார்க்க

'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது… அதுதான் சமூகநீதி’ - திருமாவளவன் சொல்வதென்ன?

'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது.. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம்' என தனது பிறந்தநாள் உரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது க... மேலும் பார்க்க

"சேகர் பாபு டைரக்ஷன்; அந்தக் கூலியும் Flop, இந்தக் கூலியும் Flop" - சீமான் கலகல விமர்சனம்!

13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அடவடித்தனமாக அப்புறப்படுத்தியது திமுக அரசு. ... மேலும் பார்க்க

ஐ.பெரியசாமி ED ரெய்டு: "இந்த அமலாக்கத்துறை ரெய்டெல்லாம் வெறும் ஏமாற்று வேலைதான்!" - சீமான்

திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோ... மேலும் பார்க்க

"ED-க்கும் அஞ்சமாட்டோம்; மோடிக்கும் அஞ்சமாட்டோம்... சட்டபடி எதிர்கொள்வோம்!" -திமுக R.S பாரதி அறிக்கை

திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோ... மேலும் பார்க்க