செய்திகள் :

சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தது முடிவு!

post image

மும்பை: நிலையற்ற அமர்வில், இன்றைய வர்த்தகத்தில், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தும் முடிவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.57 புள்ளிகள் உயர்ந்து 74,571.98 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31.3 புள்ளிகள் உயர்ந்து 22,584.65 புள்ளிகளாக இருந்தது. நாளின் பிற்பாதியில் சென்செக்ஸ் 272.39 புள்ளிகள் உயர்ந்து 74,725.89 ஆகவும், நிஃப்டி 47.45 புள்ளிகள் உயர்ந்து 22,600.80 ஆகவும் இருந்தது.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.71 புள்ளிகள் உயர்ந்து 74,602.12 ஆகவும், தொடர்ந்து ஆறாவது அமர்வாக தேசிய பங்குச் சந்தை ஆன நிஃப்டி 5.80 புள்ளிகள் சரிந்து 22,547.55 புள்ளிகளில் நிலைபெற்றது.

நிஃப்டி-யில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், ட்ரெண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தது.

துறை வாரியாக ஐடி, மெட்டல், ஆயில் & கேஸ், எனர்ஜி, கேப்பிட்டல் குட்ஸ், பொதுத்துறை வங்கி, ரியாலிட்டி ஆகியவை 0.5 முதல் 1 சதவிகிதமும் சரிந்தும் ஆட்டோ, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப்எம்சிஜி, டெலிகாம் ஆகிய பங்குகள் தலா 0.5 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.

கேன் ஃபின் ஹோம்ஸ், டெல்லிவேரி, குஜராத் கேஸ், மஹிந்திரா ஹாலிடே, சன்டெக் ரியாலிட்டி, செரா சானிட்டரி, சொனாட்டா சாப்ட்வேர், பிர்லாசாஃப்ட், டாடா எல்க்ஸி, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜோதி லேப்ஸ், சம்மான் கேப்பிட்டல், என்சிசி, டாடா கம்யூனிகேஷன்ஸ், சன் பார்மா அட்வான்ஸ்டு, செல்லோ வேர்ல்ட், பிவிஆர் ஐநாக்ஸ், ஸ்டார் ஹெல்த், ஐஆர்சிடிசி உள்ளிட்ட 230 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார குறைந்த விலையை எட்டியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.6,286.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,185.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் சரிந்து முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.51 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 75.16 டாலராக உள்ளது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கினால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 28 காசுகள் குறைந்து ரூ.87... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!

புதுதில்லி: இன்றைய காலை நேர வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.46 லட்சம் கோடி அளவுக்கு துடைத்தெறியப்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,414.33 புள்ளிகள் சரிந்தது மு... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு!!

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 28) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் ஓரளவு சமநிலையில் முடிந்தது.இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு ... மேலும் பார்க்க

எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

கடந்த ஜனவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதத்தில்... மேலும் பார்க்க

இரு மடங்காக அதிகரித்த தனியாா் நுகா்வு

இந்தியாவின் தனியாா் நுகா்வு முந்தைய 2023-ஆம் ஆண்டை விட 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்துடன் இணைந்து சந்தை ஆலோசனை நிறுவனமான டலா... மேலும் பார்க்க

டாடா ப்ளேயுடன் ஏா்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏா்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பாா்தி ஏா்டெல் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. இது... மேலும் பார்க்க