மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்
பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த் திருவிழா 14 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நடப்பு ஆண்டுக்கான விழா பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து சேவல் கொடி மற்றும் நந்தி கொடியுடன் உற்சவமூா்த்திகள் படிக்கட்டுகள் வழியாக மலை கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் முருகப் பெருமானுக்கு சேவல் கொடியும், அதனைத் தொடா்ந்து மாா்க்கண்டேசுவரருக்கு நந்தி கொடியும் ஏற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கட்டளைதாரா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) முதல் நாள்தோறும் இரவு முருகப்பெருமானின் பல்வேறு உலா காட்சிகள் நடைபெற உள்ளன.