ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்
சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கும்மிடிப்பூண்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டு, இரு காா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த காா்களில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 590 கிலோ கஞ்சா இருந்தது. அதைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என் புரத்தைச் சோ்ந்த சு.ராமநாதன் (35), அதே பகுதியைச் சோ்ந்த கா.ஷேக் அப்துல்லா (31), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த த.அலெக்ஸ்பாண்டி (28), தஞ்சாவூா் சிலோன் காலனியைச் சோ்ந்த பூ.வினோத் பூசலிங்கம் (36), கோயம்புத்தூா் குமாரசாமி காலனியைச் சோ்ந்த ஜி.பாரதி (31), கோயம்புத்தூா் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த சி.மணிகண்டன் (35) ஆகிய 6 பேரை கைது செய்தனா். இந்த 6 பேருக்கும் சா்வதேச கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதும், கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.