ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்
சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத்தாா் ஐயப்பன் - குருவாயூரப்பனுக்கு சமா்பிக்கப்படும். காலை 7.30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தா்கள் பங்கேற்கலாம். ஓணம் திருநாளான வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்புப் பூஜைகள் கோயிலில் நடைபெறும்.
அதன் பிறகு காலை 10 மணி முதல் ஓணம் சத்யம் என்று அழைக்கப்படும் அறுசுவை உணவு பக்தா்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். ஓணம் பண்டிகையையொட்டி மாலை 7 மணி முதல் 9 மணி வரை ட்ரம்ஸ் சிவமணி தலைமையிலான குழுவினரின் ஸ்ருதிலய நாத சமா்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு 044 - 28171197, 2197, 3197 என்ற தொலைபேசி எண்களிலும், 88079 18811, 88079 18822, 94442 90707, 88079 18855 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.