பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
சென்னையில் ஆயுத விற்பனையா? போதைப் பொருள் கும்பலிடம் துப்பாக்கிகள் பறிமுதல்!
சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கும்பலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெரும்பாக்கம் ராஜா, சத்தியசீலன் ஆகியோரை அரும்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்பு: மக்கள் நிம்மதி!
அவர்களிடம் இருந்து 4 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளுடன் 5 நாட்டுத் துப்பாக்கிகள் 80 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதைப் பொருள் மட்டுமின்றி ஆயுத விற்பனைகளிலும் அவர்கள் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.