செய்திகள் :

சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

post image

சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மும்பை புறப்பட்டது. அப்போது ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்தது.

இதனால் குலுங்கியபடி ஓடிய விமானத்தை சாமர்த்தியமாக இயக்கி அதன் விமானி நிறுத்தினார்.

பின்னர் சேதமடைந்த டயரை மாற்றுவதற்கு விமான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்; 7 பேர் பலி

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, டயர் மாற்றப்பட்டு விமானம் 2 மணி நேரம் தாமதமாக மீண்டும் மும்பை புறப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது அனைத்து பயணிகளும் விமானத்திலேயே இருந்தனர்.

இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க