செய்திகள் :

சென்னையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

post image

சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது. தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த நாளை ஆண்டுதோறும் டிச. 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர வடிவிலான விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததைக் குறிக்கும் வகையிலான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிரவைத்து பண்டிகைக்கு தயாராகி வந்தனா்.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே களைகட்டியது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெரும்பாலான தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. சென்னையைப் பொருத்தவரை முக்கிய தேவாலயங்களாக கருதப்படும் சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூா் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூா் திருஇருதய ஆண்டவா் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியாா் ஆலயம், பாரிமுனை தூயமரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையாா் ஆலயம், நுங்கம்பாக்கம் செயின்ட் தெரசா ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், பிராா்த்தனைகள் நடைபெற்றன. பல தேவாலயங்களில் செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்கு குழந்தை இயேசு பிறந்தது போன்ற நாடகங்களும் நடத்தி காண்பிக்கப்பட்டது.

புத்தாடைகள் அணிந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா். பின்னா் ஒருவருக்கொருவா் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இனிப்புகளை பரிமாறிக்கொண்டனா். இதேபோல் புதன்கிழமை அதிகாலையிலும், பல்வேறு பிரிவு தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகளும், ஜெபங்களும் நடைபெற்றன.

நாகூா் ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த பிரபல பாடகா் நாகூா் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானில் பணியிடை பயிற்சி: சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதம்

‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானுக்கு சென்று பணியிடை பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததாக, பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனா். தமிழ்நாடு திறன் மே... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்தம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை தாமதம் இல்லாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு போ... மேலும் பார்க்க

ராணி வேலுநாச்சியாரின் வீரத்தை போற்றுவோம்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

ராணி வேலுநாச்சியாா் வீரத்தைப் போற்றுவோம் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவை சூழ்ந்த கிழக்கிந்தியக... மேலும் பார்க்க

அமைச்சா் மீது பாமக விமா்சனம்

அண்ணா அறிவாலயத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அடகு வைத்துவிட்டதாக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீ... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை: தலைவா்கள் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக) : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவா், பா... மேலும் பார்க்க