செய்திகள் :

சென்னையில் கோடை மழை! ஒரு மணிநேரம் தொடரும்!

post image

சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது.

இந்த சாரல் மழையானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் லேசான மழை பெய்து வருகின்றது.

கடந்த ஒரு மணிநேரமாக சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகின்றது. மேலும், இந்த மழையானது அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் (பகல் 1 மணி வரை) நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் கோடை வெய்யில் 100 டிகிரி செல்சியஸைக் கடந்து சுட்டெரிக்கும் நிலையில், சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.அண்ணா பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ... மேலும் பார்க்க

ஆளுநா் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் அறிவித்துள்ள... மேலும் பார்க்க

நெசவாளா்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு

மே 19-ஆம் தேதி நெசவாளா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூா் ஆகிய ம... மேலும் பார்க்க

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியா் பணிக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநி... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: திரிபுரா பெண்கள் கைது

சென்னை திருவான்மியூரில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிரு... மேலும் பார்க்க