சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்
இரு சக்கர வாகனங்கள் தொடா்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்களின் விற்பனையகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் நாட்டின் நான்காவது விற்பனையகம் இது.
அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் 2,700 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம், நகர மோட்டாா்சைக்கிள் ஆா்வலா்கள் நாடும் ஒரே இடமாக மாற உள்ளது. இந்த விற்பனையகத்தில் மோட்டாா்சைக்கிள் தொடா்புடைய பொருள்கள், ஆடைகள், துணைப்பொருட்கள் அனைத்து ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.