செய்திகள் :

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

post image

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் வசித்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் ரெட்டி, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்,

அதேபோல் சென்னை புரசைவாக்கம் பகுதியில் மோகன்லால் காத்ரி என்பவர் இல்லத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மொத்த தங்க நகை வியாபாரியான இவர் சௌகார்பேட்டை பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு தொடர்புடைய சில இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் புகாரின் பேரிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தங்கநகை வியாபாரி என இருவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்துவரும் நிலையில் இரண்டும் ஒரே வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா அல்லது வெவ்வேறு வழக்கு சம்பந்தமாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்து முழுமையான சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்,

காலை முதல் சென்னையில் தொழிலதிபர் மற்றும் நகை வியாபாரிக்கு தொடர்புடைய 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Enforcement department raids more than 5 places in Chennai

திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்

திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது, அதற்கும் மேல் புனிதமானது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக... மேலும் பார்க்க

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! - நீதிமன்றத்தில் தகவல்

வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்பட்ட பகுதியில் புது மண்டபத்தில் இ... மேலும் பார்க்க

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. செப். 18ல் தமிழக... மேலும் பார்க்க

தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பு? விஜய் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பொதுக் கூட்டங்களின் போது உயரமான இடங்களில் ஏறும் தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது என்று தவெக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ... மேலும் பார்க்க

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

காஸாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "காஸா மூச்சுத் திணறுகிறது, உ... மேலும் பார்க்க

முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்

தில்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது முகத்தைத் துடைத்தேன், அதை வைத்து அரசியல் செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்... மேலும் பார்க்க